search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 180/3
    X

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 180/3

    • நியூசிலாந்து வீரர் கான்வே 91 ரன்னில் அவுட் ஆனார்.
    • நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இந்த அணியில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தார்.

    மிரட்டாலாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் ஹென்றி 5 விக்கெட்டும் வில்லியம் ஓரோர்கே 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே- லாதம் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லாதம் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார்.

    நீண்ட நேரமாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் வில் யங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கான்வே 91 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ரவீந்திரா 22 ரன்னிலும் மிட்செல் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×