search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆர்.சி.பி. அணி எப்படி?- 22 வீரர்கள் கொண்ட பட்டியல் முழு விவரம்
    X

    ஆர்.சி.பி. அணி எப்படி?- 22 வீரர்கள் கொண்ட பட்டியல் முழு விவரம்

    • புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் பந்து வீச்சில் பக்கபலமாக இருப்பார்கள்
    • பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், வலிங்ஸ்டோன், பில் சால்ட் உள்ளனர்.

    cஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரணடு நாட்கள் நடைபெற்றது. இதில் தக்கவைத்த வீரர்கள் தவிர்த்து 182 வீரர்கள் வீரர்கள் 639.15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    இந்த ஏலத்தின்போது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான அணி ஆர்.சி.பி.தான். ஏனென்றால் கே.எல். ராகுலை அந்த அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி எளிதாக எடுத்தது. இதனால் அந்த அணியின் ஏல யுக்திதான் என்ன? என்பது வியப்பாக இருந்தது.

    ஜேக் வில்ஸை மும்பை இந்தியன்ஸ் 5.25 கோடி ரூபாய்க்கு எடுத்தது. ஆனால் ஆர்.சி.பி. ஆர்.டி.எம்.-ஐ கூட பயன்படுத்தவில்லை. இதனால் ஆகாஷ் அம்பானி ஆர்.சி.பி. அணி நிர்வாகிகளுக்கு வந்து கைக்கொடுத்துவிட்டு சென்றார்.

    ஆர்.சி.பி. முக்கியமாக வேகப்பந்து வீச்சாளர்களை எடுப்பதில் கவனம் செலுத்தியது. புவி, ஹேசில்வுட் உள்ளிட்டோரை எடுத்துள்ளது சற்று ஆறுதல்.

    ஆர்.சி.பி. விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்கவைத்திருந்தது. ஏலத்தில் புவி, ஹேசில்வுட், நுவான் திஷாரா, லுங்கி நிகிடி ஆகிய வேகப்பந்து வீச்சாளரை எடுத்துள்ளது.

    பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், வலிங்ஸ்டோன், பில் சால்ட் ஆகியோரை தவிர குறிப்பிடத்தகுந்த பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது அந்த அணிக்கு ஒரு குறையாக இருக்கலாம்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி, 2. ரஜத் படிதார், 3. யாஷ் தயாள், 4. லியாம் லிவிங்ஸ்டோன் (வெளிநாட்டு வீரர்கள்), 5. பில் சால்ட் (வெளிநாட்டு வீரர்கள்), 6. ஜிதேஷ் சர்மா, 7. ஜோஷ் ஹேசில்வுட் (வெளிநாட்டு வீரர்கள்), 8. ரசிக் தார், 9. சுயாஷ் சர்மா, 10. க்ருனால் பாண்டியா, 11. புவனேஷ்வர் குமார், 12. ஸ்வப்னில் சிங், 13. டிம் டேவிட் (வெளிநாட்டு வீரர்கள்), 14. ரொமாரியோ ஷெப்பர்ட் (வெளிநாட்டு வீரர்கள்), 15. நுவான் துஷாரா (வெளிநாட்டு வீரர்கள்), 16. மனோஜ் பந்தேஜ், 17. ஜேக்கப் பெத்தேல் (வெளிநாட்டு வீரர்கள்), 18. தேவ்தத் படிக்கல், 19. ஸ்வஸ்திக் சிகாரா, 20. லுங்கி நிகிடி (வெளிநாட்டு வீரர்கள்), 21. அபிநந்தன் சிங், 22. மோஹித் ரதி.

    Next Story
    ×