search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் 2025:  ஏதோ நடந்துள்ளது.. ஏலத்தில் விலை போகாதது குறித்து உமேஷ் யாதவ் கவலை
    X

    ஐபிஎல் 2025: ஏதோ நடந்துள்ளது.. ஏலத்தில் விலை போகாதது குறித்து உமேஷ் யாதவ் கவலை

    • இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது.
    • சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும் அணியில் இடம் கிடைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஐபிஎல் 2025 ஏலத்தில் விலைபோகாத சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார். மிகுந்த மன உளைச்சலும், ஏமாற்றமும் அடைந்ததாக உமேஷ் கூறியுள்ளார்.

    ஐபிஎல் 2025 க்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் அனைத்து அணிகளும் பெரும் தொகையை செலவழித்தன.

    இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால், ஐபிஎல்லில் பல போட்டிகளில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற உமேஷ் யாதவை வாங்குபவர் கிடைக்கவில்லை.

    உமேஷ் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இப்போது இந்த 37 வயதான உமேஷ் தனது மனக்கஷ்டத்தை குறித்து பேசியுள்ளார்.

    இன்சைட் ஸ்போர்ட்ஸிடம் பேசிய அவர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். நான் 15 ஆண்டுகளாக இந்த லீக்கில் விளையாடி வருகிறேன். இந்த ஐபிஎல் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

    நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? நான் மோசமாக உணர்கிறேன். சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும் அணியில் இடம் கிடைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.

    இது உரிமையாளர்கள் முடிவை பொறுத்தது, மற்றும் ஏலத்தில் எனது பெயர் தாமதமாக வந்ததும் ஒரு காரணம். தாமதமாக பெயர் வந்ததால் என்னை வாங்க அவர்களிடம் பணம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதையும் மீறி ஏதோ நடந்துள்ளது.

    நான் மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். இருக்கட்டும் பரவாயில்லை. யாருடைய முடிவையும் என்னால் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    உமேஷ் 15 ஆண்டுகளில் 148 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். . என்னால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும் என நினைக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தனது ஓய்வு கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

    Next Story
    ×