search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் 2025: குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆனார் பார்த்திவ் படேல்
    X

    ஐபிஎல் 2025: குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆனார் பார்த்திவ் படேல்

    • குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியது.
    • பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.

    ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் துணை தலைமை பயிற்சியாளராக பார்த்திவ் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்தமுறை கோப்பையை வென்று அசத்தியது.

    புதிய பேட்டிங் மற்றும் துணை தலைமை பயிற்சியாளர் தொடர்பான அறிவிப்பை குஜராத் அணி அறிக்கையாக வெளியிட்டது. அதில், "வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு டைட்டன்ஸ் தயாராகி வரும் நிலையில், பேட்டிங் நுட்பங்கள், உத்திகள் குறித்த பார்த்திவின் நுண்ணறிவு வீரர்களின் திறமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்."

    "அவரது கூர்மையான கிரிக்கெட் திறன், இளம் திறமைகளுக்கு வழிகாட்டும். இதோடு பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்தி, வீரர்களின் மேம்பாடு, செயல்திறனுக்கு அவர் பங்களிப்பார்," என்று குறிப்பிட்டுள்ளது.

    குஜராத் அணியில் கேரி கிர்ஸ்டெனுக்கு மாற்றாக பார்த்திவ் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேரி கிர்ஸ்டென் குஜராத் அணியில் இருந்து விலகி பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இணைந்தார்.

    Next Story
    ×