என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் முதல்முறையாக களமிறங்கும் ஷர்துல் தாக்கூர்

- ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக ஷர்துல் தாகூர் விளையாடி வருகிறார்.
- கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தியாவில் ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அரையிறுதியில் மும்பை, விதர்பா, கேரளா, குஜராத் அணிகள் முன்னேறியுள்ளனர். ஒரு அரையிறுதியில் குஜராத் -கேரளா அணிகளும் மற்றொரு அறையிறுதியில் மும்பை- விதர்பா அணிகளும் மோதுகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் மும்பை அணியில் இடம்பிடித்துள்ள ஷர்துல் தாகூர் விளையாட உள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ESSEX அணிக்காக இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் 7 கவுண்டி போட்டிகளில் அவர் விளையாடுகிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வரும் ஜூனில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான பயிற்சியாக கவுண்டி போட்டிகள் அமையும் என பார்க்கப்படுகிறது.