என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    LSG Vs MI: Impact Player-ஆக கூட ரோகித் இடம்பெறவில்லை- வெளியான காரணம்
    X

    LSG Vs MI: Impact Player-ஆக கூட ரோகித் இடம்பெறவில்லை- வெளியான காரணம்

    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் இம்பேக்ட் பிளேயராக இடம்பெறவில்லை.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்சை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தொடர்ந்து 3 போட்டிகளாக இம்பெக்ட் பிளேயராக விளையாடி வந்த ரோகித் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூட இல்லாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நடந்த முடிந்த 3 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் இந்த முடிவை மும்பை அணி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×