என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

MI-க்காக 100-வது போட்டியில் களமிறங்கிய 8-வது வீரர்: SKY-க்கு டிசர்ட் வழங்கி பொல்லார்ட் வாழ்த்து
- மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
- சூர்யகுமாருக்கு அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட்டை கொடுத்து பொல்லார்ட் வாழ்த்து தெரிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம் சூர்யகுமார் யாதவ் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 100-வது போட்டியில் சூர்யகுமார் களமிறங்கி சாதனை படைத்துள்ளார்.
மும்பை அணிக்காக 100-வது போட்டியில் களமிறங்கிய 8-வது வீரர் சூர்யகுமார். அவருக்கு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் அவர் பெயர் மற்றும் 100 என்ற நம்பர் பொறித்த டிசர்ட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதற்குமுன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அம்பதி ராயுடு ஆகியோர் உள்ளனர்.






