என் மலர்
ஐ.பி.எல்.

ஐசிசி விருதை சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்ட கமிந்து மெண்டிஸ்

- 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார்.
- அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.
அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ், பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார். அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டதில் இருந்து இலங்கை அணி பல தொடர்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.