என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எனக்கு பயிற்சியளிக்க யாரும் முன்வரவில்லை- பும்ரா
    X

    எனக்கு பயிற்சியளிக்க யாரும் முன்வரவில்லை- பும்ரா

    • சிலர் எனது பந்து வீச்சுப் பாணியை நிறுத்த வேண்டும் என்றார்கள்.
    • தொலைக்காட்சியை பார்த்தே கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    2 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (12) வீழ்த்தியுள்ளார். இந்திய பந்து வீச்சின் முதுகெழும்பாக பும்ரா விளங்குகிறார்.

    இந்நிலையில் உலகில் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக விளங்கும் பும்ராவுக்கு ஆரம்ப காலங்களில் பயிற்சியளிக்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பும்ரா கூறியதாவது:-

    ஆரம்பத்தில் என்னுடைய பௌலிங் ஆக்ஷனை பார்த்தவர்கள் நான் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே விளையாடுவேன் என நினைத்தார்கள். அதனால் எனக்கு பயிற்சி அளிக்க பலரும் முன் வரவில்லை. சிலர் எனது பந்து வீச்சுப் பாணியை நிறுத்த வேண்டும் என்றார்கள். என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் நான் என் மேல் நம்பிக்கை வைத்தேன். தொலைக்காட்சியை பார்த்தே கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன்.

    என அவர் கூறினார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×