என் மலர்
கிரிக்கெட் (Cricket)
டி20 கிரிக்கெட்டில் 900 சிக்சர்கள்.. 2-வது வீரராக சாதனை படைத்த பொல்லார்ட்
- இந்த போட்டியில் பொல்லார் 36 ரன்களை விளாசினார்.
- அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.
துபாயில் ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ்- எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பொல்லார் 36 ரன்களையும், தொடக்க வீரர் குசல் பெரேரா 33 ரன்களையும் சேர்த்தனர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ஃபகர் ஜமான் 52 பந்துகளில் 67 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் 34 ரன்களையும், சாம் கரண் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூல டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19.1 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
Kieron Pollard hits his 900th six in T20 cricket.- The second player to reach the mark after Chris Gayle!#Pollard pic.twitter.com/ybjTK7EK7i
— DEEP SINGH (@CrazyCricDeep) January 16, 2025
முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டில் தனது 900 சிக்சர்களை நிறைவு செய்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய உலகின் 2-வது வீரர் எனும் சதனையையும் படைத்துள்ளார். அதன்படி வைப்பர்ஸ் அணி வீரர் பெர்குசன் வீசிய இன்னிங்ஸின் 19-வது ஓவரின் முதல் பந்திலேயே பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்பு, கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். முதல் 4 இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களே உள்ளனர்.
அதிக சிக்ஸ்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:-
கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) - 1056 சிக்சர்கள் (455 இன்னிங்ஸில்)
கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) - 901 சிக்சர்கள் (613 இன்னிங்ஸ்)
ஆண்ட்ரே ரஸல் (வெஸ்ட் இண்டீஸ்) - 727 சிக்சர்கள் (456 இன்னிங்ஸில்)
நிக்கோலஸ் புரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 592 சிக்சர்கள் (350 இன்னிங்ஸில்)
காலின் முன்ரோ (நியூசிலாந்து) - 550 சிக்சர்கள் (415 இன்னிங்ஸில்)