search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடி கொடுக்க முடிவா? லக்னோ அணி உரிமையாளர் பதில்
    X

    ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடி கொடுக்க முடிவா? லக்னோ அணி உரிமையாளர் பதில்

    • ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது.
    • எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்காளக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 5 முதல் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடியை கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்காக ரூ.50 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஏலத்துக்கு வந்தால் ஒரு வீரருக்கு 50 சதவீத சம்பளத்தை பயன்படுத்த முடியுமா? மற்ற 22 வீரர்களை எப்படி தேர்வு செய்ய இயலும்.

    எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது. சிறந்த வீரர் சிறந்த கேப்டன் இருக்க வேண்டும். ஒவ்வொரு உரிமையாளருக்கும் ஒரே ஆசை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக கேப்டன் கே.எல்.ராகுலை பொது வெளியில் சஞ்சீவ் கோயங்கா கண்டித்தார். அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இருந்தது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக நீடிக்க மாட்டார். ஆனால் அவர் அணியில் தொடர்ந்து இருப்பார்.

    சமீபத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை கே.எல். ராகுல் சந்தித்து கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

    Next Story
    ×