என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பென் ஸ்டோக்ஸ், ரூட் இல்லை.. இங்கிலாந்தின் முக்கிய வீரர் இவர்தான்- மைக்கேல் வாகன்
- அவரால் எல்லா டெஸ்ட் போட்டியும் விளையாட முடியாது.
- இங்கிலாந்து அணியில் அவர் இல்லாமல் போனால், அதை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் விரும்பும்.
இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் காயத்தால் இடம் பெறவில்லை. மேலும் முதல் டெஸ்டில் காயம் அடைந்து அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் தொடரை விட்டு விலகி உள்ளார்.
இந்த நிலையில் தட்டையான ஆடுகளங்களில் பென் ஸ்டோக்சை விட மார்க் வுட் முக்கிய வீரர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நீங்கள் பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான ஆடுகளத்தில் விளையாடும் பொழுது, இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்சை விட மிக முக்கியமானவர் மார்க் வுட்தான். ஆனால் அவர் தற்போது காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சாதகமாக இருந்த நிலையில், இலங்கை அணியின் தினேஷ் சண்டிமல் மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, காயத்தால் மார்க் வுட் வெளியேறியிருந்தது எவ்வளவு பின்னடைவாக இருந்தது என்பதை காண முடிந்தது.
பாகிஸ்தானிலும் நியூசிலாந்திலும் இப்படியான ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை எடுக்க என்ன செய்வது என வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி விளையாடும் டெஸ்டுகளில் 60 முதல் 70 சதவீதம் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் மார்க் வுட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவரால் எல்லா டெஸ்ட் போட்டியும் விளையாட முடியாது.
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் அட்டவணையில் இந்தியாவை உள்நாட்டில் வீழ்த்துவதற்கும், ஆஸ்திரேலியா சென்று அவர்களை வீழ்த்துவதற்கும் மார்க் வுட் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருப்பார். இங்கிலாந்து அணியில் அவர் இல்லாமல் போனால், அதை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிகவும் விரும்பும்.
ஆர்ச்சர் கூட 95 மைல் வேகத்தில் தொடர்ந்து வீசியது கிடையாது. ஆனால் மார்க் வுட் அதை தொடர்ந்து செய்கிறார்.அவரது வெறித்தனமான வேகம் கொண்டு வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் உலகத்தில் இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட்டில் நாம் பார்த்திராத ஒரு பையனாக அவர் இருக்கிறார். அவர் எதிரணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு நடுக்கத்தை உண்டாக்குகிறார்.
இவ்வாறு வாகன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்