search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அறிமுக ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் விளாசி தென் ஆப்பிரிக்க வீரர் வரலாற்று சாதனை
    X

    அறிமுக ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் விளாசி தென் ஆப்பிரிக்க வீரர் வரலாற்று சாதனை

    • தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்துக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது
    • இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது.

    பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

    லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ 150 ரன்கள் விளாசி அவுட்டானார்.

    இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில், 150 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை தென் ஆப்பிரிக்கா வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கீ படைத்தார்.

    இதற்கு முன்னதாக 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் அடித்த 148 ரன்கள் தான் அறிமுக ஒருநாள் போட்டியில் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகால சாதனையை மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 19 ஆவது வீரர் என்ற சாதனையையும் மேத்யூ ப்ரீட்ஸ்கீ முறியடித்துள்ளார்.

    Next Story
    ×