என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிராக நாளை புதிய தொடக்க வீரர்கள்: 2 வீரர்களுக்கு வாய்ப்பு- வெளியான தகவல்

- சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து நாளை மோதுகிறது.
- இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் நாளை விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் முகமது ஷமியும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் சுப்மன் கில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் முகமது சமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.