search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர்கள்: நிகோலஸ் பூரன் புது சாதனை
    X

    டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர்கள்: நிகோலஸ் பூரன் புது சாதனை

    • முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டிரின்பாகோ அணி 197 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீசில் தற்போது கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது. கேப்டன் பிளட்சர் 93 ரன்னும், கைல் மேயர்ஸ் 60 ரன்னும் எடுத்தனர்.

    டிரின்பாகோ அணியின் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட் எடுத்தார்.

    195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டிரின்பாகோ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஜேசன் ராய், நிகோலஸ் பூரன் அதிரடி காட்டினர்.

    நிகோலஸ் பூரன் 43 பந்தில் 94 ரன்னும், ஜேசன் ராய் 34 பந்தில் 64 ரன்னும் எடுத்தனர். இறுதியில், டிரின்பாகோ அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் நிகோலஸ் பூரன் 7 சிக்சர் அடித்தார். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் 63 இன்னிங்சில் 151 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டில் 36 இன்னிங்சில் 135 சிக்சர் அடித்து இருந்தார்.

    இதேபோல், டி20 அரங்கில் ஒரு ஆண்டில் 2,000 ரன் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகோலஸ் பூரன் படைத்துள்ளார்.

    இவர் 63 இன்னிங்சில் 2,022 ரன் எடுத்துள்ளார்.

    பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021ல் 48 இன்னிங்சில் 2,036 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×