என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
முல்தான் மைதானம் பவுலர்களின் கல்லறை- பாகிஸ்தானை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்கள்
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328 ரன்கள் குவித்தது.
- பாகிஸ்தான் தரப்பில் ஷபிக், மசூத் சதம் விளாசினர்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சான் மசூத், தொடக்க வீரர் அப்துல்லா சபிக்குடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த ஜோடி சதம் கடந்து அசத்தினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 253 ரன்கள் அமைத்து பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஷபிக் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஷான் மசூத் 150 ரன்கள் கடந்து 151 ரன்களில் அவுட்டானார். இறுதியில் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் முல்தான் பிட்ச் பவுலர்களுக்கும் கொஞ்சமும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முல்தான் மைதானம் தார் ரோட் போல இருக்கிறது. அங்கே டாஸ் வென்றது சிறப்பானது. அதில் ஷான் மசூத் பெடல் ஷூ போல விளையாடுகிறார். அதே போல மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். முல்தான் பிட்ச் பவுலர்களின் கல்லறை என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.