என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஒருநாள் போட்டியில் மோசமான சாதனை படைத்த முதல் தொடக்க வீரர்
- தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தை அப்துல்லா ஷபிக் பிடித்துள்ளார்.
- இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அப்துல்லா ஷபிக் டக் அவுட்டில் வெளியேறியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த முதல் தொடக்க வீரர் எனும் சாதனையை இவர் படைத்துள்ளார்.
முன்னதாக, பார்ல் மற்றும் கேப்டவுனில் நடந்த முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் மார்கோ ஜான்சனின் பந்துவீச்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த அப்துல்லா ஷபிக், கடைசி ஒருநாள் போட்டியின் போது காகிசோ ரபாடா பந்துவீச்சில் 0 ரன்களில் வெளியேறியதன் காரணமாக இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து மூன்று முறை 0 அவுட்டாகியுள்ளார்.
அதன்படி அவர் கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகினார். இருப்பினும் அவர் மிடில் ஆர்டரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக இன்னிங்சில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த வீரர்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்தை அப்துல்ல ஷபிக் பிடித்துள்ளார்.
இவரைத் தவிர்த்து இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங், இலங்கை அணியின் ஜெயவர்தனே, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஷேன் வாட்சன், பாகிஸ்தானின் சல்மான் பட், ஷோயப் மாலிக், உள்ளிட்ட பல வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.