search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிராக அறிமுக போட்டியில் சதமடித்த கம்ரான்- முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 259/5
    X

    இங்கிலாந்துக்கு எதிராக அறிமுக போட்டியில் சதமடித்த கம்ரான்- முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 259/5

    • பாகிஸ்தான் தரப்பில் கம்ரான் குலாம் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    முல்தான்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் சைம் அயூப் களமிறங்கினர். இதில் அப்துல்லா ஷபீக் 7 ரன்னிலும், அடுத்து வந்த ஷான் மசூத் 3 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து சைம் அயூப் உடன் கம்ரான் குலாம் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதில் சைம் அயூப் 77 ரன்னிலும், அடுத்து வந்த சவுத் ஷகீல் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கம்ரான் குலாம் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்டம் நேரம் முடிய 5 ஓவர்களே இருந்த நிலையில் கம்ரான் 118 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து முகமது ரிஸ்வான் மற்றும் ஆகா சல்மான் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான் 37 ரன்னுடனும், ஆகா சல்மான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    Next Story
    ×