என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மெல்போர்ன் பிட்ச் நாதன் லயனுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும்: கம்மின்ஸ் நம்பிக்கை
- ஆடுகளம் சற்று புற்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ஆஃப் ஸ்பின்னர்கள் பந்தை கூடுதலாக திருப்ப முடியும் என நம்புகிறேன்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை காலை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்த போட்டியின் வெற்றி மிக முக்கியமானது.
இந்த நிலையில் மெல்போர்ன் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது:-
ஆடுகளத்தை பார்ப்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. கடந்த சில வருடங்களாக எப்படி இருந்ததோ, அதோடு ஒத்துப்போகும் வகையில் தோன்றுகிறது. ஆடுகளத்தை சிறிது புற்கள் ஆக்கிரமித்துள்ளது. மிகவும் நல்ல மற்றும் உறுதியான ஆடுகளம் என உணர்கிறேன். இதனால் ஆடுகள பராமறிப்பாளர்கள் சிறப்பாக அமைத்துள்ளனர். கடந்த ஐந்து ஆறு வருடங்களாக எப்படி இருந்ததோ, அதேபோல்தான் இந்த வருடமும் இருக்கலாம்.
மெல்போர்னில் 39 டிகிரி வெப்ப நிலையில் வீரர்கள் விளையாட வேண்டியிருக்கும். விக்கெட் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சம பேலன்ஸ் உள்ளதாக இருக்கும். நாதன் லயன் இங்கு சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு வலது பக்கத்தில் இடது பக்கமாக பந்து சற்று கூடுதலாக திரும்பினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை" என்றார்.
இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது.