என் மலர்
கிரிக்கெட் (Cricket)
எதிர்காலத்தில் பிசிசிஐ அல்லது ஐசிசி பதவிகளில் அஸ்வின் இருப்பார்- முன்னாள் பாக். வீரர் புகழாரம்
- அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான மரியாதை கிடைக்காமல் போயிருப்பதாலும் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம்.
- அஸ்வின் போன்று கிரிக்கெட் குறித்த அறிவுடையவர்கள் சிலரே இருக்கின்றனர்.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியில் அவர் விளையாட உள்ளார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உலகெங்கிலும் இருந்து குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லதீப்பும் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறியதாவது:-
அஸ்வினுக்கு இந்திய அணியில் சரியான மரியாதை கிடைக்காமல் போயிருப்பதாலும் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எனக்கு முழுவதுமாக தெரியாது. அதேபோன்று வாஷிங்டன் சுந்தர் வருகையும் அவரது கெரியரின் முடிவுக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
இருந்தாலும் ஓய்வு என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை நாம் மதித்தாக வேண்டும். இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு ஜாம்பவான்கள் இருக்கின்றனர். ஆனால் அஸ்வின் போன்று கிரிக்கெட் குறித்த அறிவுடையவர்கள் சிலரே இருக்கின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் குறித்த தெளிவான அறிவு அஸ்வினிடம் வேற லெவலில் இருக்கிறது. எனவே நிச்சயம் அவர் எதிர்காலத்தில் பிசிசிஐ அல்லது ஐசிசி ஆகிய நிர்வாக பதவிகளை கூட அடைய முடியும். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.
என்று லதீப் கூறினார்.