என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
எங்கள் திட்டத்தில் ரிஷப் பண்ட் இருந்தார்: லக்னோ அணி உரிமையாளர்
- ரிஷப் பண்ட்-க்கு சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி இடையே கடும் போட்டி நிலவியது.
- எல்.எஸ்.ஜி. 27 கோடி ரூபாய் கொடுக்க டெல்லி ஆர்.டி.எம். வாய்ப்பை பயன்படுத்தவில்லை.
ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவரை லக்னோ அணி இவ்வளவு தொகைக்கு எடுத்தது.
ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணிக்கு மீண்டும் எடுக்க ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை டெல்லி அணி பயன்படுத்தியது. ஆனால் லக்னோ அணியின் ரூ.27 கோடி தொகையை அவர்களால் வழங்க முடியவில்லை. இதனால் லக்னோ அணி இந்த தொகைக்கு எடுத்தது. அவர் லக்னோ அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது தொடர்பாக லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது:-
ரிஷப் பண்ட்-ஐ தேர்வு செய்வது என்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் பட்டியலில் இருந்ததால் அவருக்காக கோடிக்கணக்கில் வைத்து இருந்தோம். ரூ.27 கோடி என்று சற்று உயர்ந்து விட்டது. ஆனால் எங்களுக்கு அவர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ரிஷப் பண்ட் சிறந்த வீரர் மேட்ச் வின்னர் ஆவார். அவர் லக்னோ அணியில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.