search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரோகித், ரஹானே, துபே.. மும்பை பேட்டிங் ஆர்டரை பொளந்த உமர் நாசிர் மிர் - யார் இவர்?
    X

    ரோகித், ரஹானே, துபே.. மும்பை பேட்டிங் ஆர்டரை பொளந்த உமர் நாசிர் மிர் - யார் இவர்?

    • ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
    • மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமர் நாசிர் மிர் இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    31-வயது உமர் நாசிர் ஆக்ரோஷ பந்துவீச்சு காரணமாக மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உமர் நாசிர் பந்துவீச்சில் ரோகித் சர்மா மூன்று ரன்களுக்கும், ரஹானே 12 ரன்களுக்கும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.

    கடந்த 2013 முதல் விளையாடி வரும் மிர் இதுவரை 57 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிர் 54 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் இதுவரை 32 விக்கெட்டுகளை கைப்ற்றியுள்ளார்.

    புல்வாமாவை சேர்ந்தவரான உமர் நாசிர் மிர் கடந்த 2018-19 தியோதர் கோப்பை தொடரின் போது இந்தியா சி அணிக்காக விளையாடினார். ரஞ்சி கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் உமர் நாசிர் மிர் மற்றும் யுத்விர் சிங் தலா நான்கு விக்கெட்டுகளையும், ஆகிப் நபி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    Next Story
    ×