search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பழிக்கு பழி.. அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆர்பரித்த ருதுராஜ்- வைரலாகும் வீடியோ
    X

    பழிக்கு பழி.. அர்ஷ்தீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி ஆர்பரித்த ருதுராஜ்- வைரலாகும் வீடியோ

    • மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.
    • அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் மகாராஷ்டிரா- பஞ்சாப் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குல்கர்னி 107 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 44.4 ஓவரில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மகாராஷ்டிரா அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    முன்னதாக மகாராஷ்டிரா அணி பேட்டிங் செய்த போது கேப்டன் ருதுராஜ் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

    அப்போது பவுலராக இருந்து சிறப்பாக விளையாடிய அர்ஷ்தீப் சிங் 3 சிக்சர் 3 பவுண்டரி விளாசி 49 ரன்னில் ருதுராஜ் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உடனே ருதுராஜ் பந்தை ஆக்ரோஷமாக தரையில் அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    Next Story
    ×