search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    SA20 பைனல்: பந்தை கேட்ச் பிடிக்கும் போது கழன்ற ரசிகரின் டவுசர்.. விழுந்து வாரிய வீடியோ வைரல்
    X

    SA20 பைனல்: பந்தை கேட்ச் பிடிக்கும் போது கழன்ற ரசிகரின் டவுசர்.. விழுந்து வாரிய வீடியோ வைரல்

    • சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 76 ரன்கள் வித்தியாசத்தில் MI கேப் டவுன் -யிடம் தோற்றது.
    • 16வது ஓவரில் ஐடன் மார்க்ரம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார்.

    தென் ஆப்பிரிக்காவின் SA20 2025 கிரிக்கெட் பிரீமியர் லீக் சீசன் பரபரப்பான முடிவை எட்டியுள்ளது.

    நேற்று முன் தினம் நடந்த இறுதிப்போட்டியில் MI கேப் டவுன் வெற்றி பெற்று தங்கள் முதல் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது. இரண்டு முறை சாம்பியனான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 76 ரன்கள் வித்தியாசத்தில் MI கேப் டவுன் -யிடம் தோற்றது.

    இந்நிலையில் போட்டியின் போது ஹோவர் மைதானத்தில் நடந்த ஒரு வினோத சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஆட்டத்தின் 16வது ஓவரில் ஐடன் மார்க்ம் வீசிய பந்தில் கானர் எஸ்டெர்ஹுய்சென் ஒரு சிக்ஸர் அடித்தார். பார்வையாளர்கள் அரங்கை நோக்கி வந்த அந்த பந்தை தீவிர ரசிகர் ஒருவர் பிடிக்க பிரயர்த்தனப்பட்டார்.

    ஆனால் அவர் நின்றிருந்த மேல் டெக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். அவ்வாறு அவர் விழும்போது அவரின் கால் சட்டை (டவுசர்) அவிழ்ந்து விலகி நிலைமையை மேலும் மோசமாகியது. இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    Next Story
    ×