என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சஞ்சு சாம்சன் இல்லாதது இந்திய அணிக்கு தான் இழப்பு - வைரலாகும் கம்பீரின் பழைய வீடியோ
- சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை..
- சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால்
டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக சஞ்சு சாம்சன் தனது கடைசி 5 டி20 போட்டிகளில் 3 சதம் அடித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 56.66 என்ற அட்டகாசமான சராசரி வைத்துள்ளார். 2023 டிசம்பரில் தனது கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசினார். ஆனால் அதன் பிறகு அவர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அது இந்திய அணிக்கு தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதை போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் திறமையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.
Gautam Gambhir was criticising selectors, Coach, Captain etc before for not selecting Sanju SamsonHe is Head coach now but still Sanju is not selected. Does he speak about it now!? #ChampionsTrophy pic.twitter.com/Ox32wjWkZt
— Veena Jain (@DrJain21) January 18, 2025