என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
3-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை பந்தாடியது அயர்லாந்து
- பால்பிரைன் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும் விளாசினார். ஹாரி டெக்டர் 48 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.
- தென்ஆப்பிரிக்காவின் ஜேசன் ஸ்மித் 91 ரன்கள் அடித்து போராடியது வீண் ஆனது.
தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் அபுதாபியில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 284 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பால்பிரைன் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும் விளாசினார். ஹாரி டெக்டர் 48 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லிசாட் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 1 ரன்னிலும், வான் டெர் டுஸ்சன் 3 ரன்னிலும் வெளியேறினார்.
பால் ஸ்டிர்லிங்
அதன்பின் தென்ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. ஜேசன் ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து விளைாடினார். அவர் 93 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் 215 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் கிரஹாம் ஹும், கிரேக் யங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 88 ரன்கள் அடித்த பால் ஸ்டிர்லிங் ஆட்ட நாயகன் விருது வென்றார். தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருது வென்றார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. மொத்தமாக ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.