search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அன்று ஆட்டோ டிரைவரின் மகன்.. இன்று டிஎஸ்பி.. சிராஜின் நெகிழ்ச்சி பதிவு
    X

    அன்று ஆட்டோ டிரைவரின் மகன்.. இன்று டிஎஸ்பி.. சிராஜின் நெகிழ்ச்சி பதிவு

    • எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
    • எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சிராஜ் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சிராஜ்-க்கு அம்மாநில அரசு போலீஸ் டிஎஸ்பி பதவியை வழங்கி கவுரவித்தது.

    இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் மகன் முதல் டிஎஸ்பி வரையிலான எனது பயணம் என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

    அதில், எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எனது அப்பா ஆட்டோ டிரைவர். எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் குறையவில்லை. எனது எதிர்காலத்திற்காக கிரிக்கெட்டை மட்டுமே நம்பினேன். நான் எப்போதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு கண்டேன்.

    எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஆர்சிபி அணியில் இணைந்தது மிகப்பெரிய தருணம். அப்போதுதான் எனது உண்மையான பயணம் தொடங்கியது. அணியில் இணைந்த நேரத்தில் விராட் பாய் எனக்கு ஆதரவாக இருந்தார்.

    எனது தந்தையின் மரணம் போட்டியின் போது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். அதன் பிறகும், நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவை நினைத்துப் பார்த்தேன். இதனால் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அந்த தொடரில் வெற்றி பெற்றோம்.

    ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியே என்னுடையே சிறந்த பந்து வீச்சு ஆகும். அந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது வெற்றிக்கு உதவியது. அதன்பிறகு எனது செயல்பாடுகள் மேம்பட்டு வருகின்றன. எனது உழைப்பிற்காக அரசு எனக்கு டிஎஸ்பி பதவியை வழங்கி உள்ளது.

    என்னுடைய இந்த பயணம் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். என சிராஜ் கூறியிருந்தார்.

    Next Story
    ×