search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உடற் தகுதி முக்கியம்: இந்திய இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கம்பீர்- ஹர்திக்
    X

    உடற் தகுதி முக்கியம்: இந்திய இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கம்பீர்- ஹர்திக்

    • நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என கம்பீர் கூறினார்.
    • சூர்யகுமார் கடைசி இரண்டு ஓவர்களை யாருமே எதிர்பாராத வீரர்களுக்கு வழங்கியது சிறப்பான முடிவு என ஹர்திக் கூறினார்.

    மும்பை:

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து ட்ரெஸ்ஸிங் ரூமில் கௌதம் கம்பீர் வீரர்களிடையே உரையாற்றினார். போர்குணத்துடன் வெற்றிக்காக போராடினால் நிச்சயம் இப்படித்தான் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் இதே போல் தொடர்ந்து வெற்றிக்காக போராட வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    சில வீரர்கள் ஒரு நாள் தொடரில் ஆடப்போவதில்லை. அவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கும். வங்கதேச தொடருக்கு அவர்கள் திரும்ப வரும்போது அவர்களது திறமை மற்றும் உடற் தகுதி உச்சத்தில் இருக்க வேண்டும். அந்தத் தொடருக்கு நீங்கள் நேரடியாக வந்து, நாம் சிறப்பாக செயல்படலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். எனவே, நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

    என கூறினார்.

    இதனையடுத்து எப்போதுமே பயிற்சியாளர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசும்போது ஒரு கேப்டனை தான் பேச அழைப்பார்கள். ஆனால் நேற்று கம்பீர், சூர்யகுமாரை அழைக்காமல் ஹர்திக் தற்போது உங்களிடம் உரையாற்றுவார் என்று கூறினார்.

    கம்பீர் பாய் சொல்வது போல் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றெடுக்கின்றோம் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.

    மேலும், நான் எப்போதுமே கீழ் வரிசை வீரர்களும் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று கூறுவேன். அதற்கு ஏற்றார் போல் வாஷிங்டன் சுந்தரும் ரவி பிஷ்னாயும் நேற்று அடித்த ரன்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று சூர்யகுமார் யாதவ் கடைசி இரண்டு ஓவர்களை யாருமே எதிர்பாராத வீரர்களுக்கு வழங்கியது சிறப்பான ஒரு முடிவு.

    அதற்கு என்னுடைய சல்யூட். கம்பீர் பாய் சொல்வது போல் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றெடுக்கின்றோம்.

    என்று கூறினார்.

    Next Story
    ×