என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து பரிதாபம்: 88 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன்
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்து டிக்ளேர்.
- நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சண்டிமல் (116), கமிந்து மெண்டிஸ் (182 நாட்அவுட்), குசால் மெண்டிஸ் (106 நாட்அவுட்) ஆகியோர் சதம் விளாசி இலங்கை முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் 6 ரன்களுடனும், பட்டேல் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கேன் வில்லியம்சன் இன்று மேலும் 1 ரன் எடுத்து ஏழு ரன்னில் ஆட்மிழந்தார். பட்டேல் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் பிரபாத் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. சான்ட்னெர் மட்டும் தாக்குப்பிடித்து 29 ரன்கள் அடித்தார். பிரபாப் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் இலங்கையை 200 ரன்களுக்கும் அதிகம் முன்னிலை பெற்றதால் நியூசிலாந்து பாலோ-ஆன் ஆனது.
இலங்கை அணியை பாலோ-ஆன் கொடுத்து நியூசிலாந்தை மீண்டும் பேட்டிங் செய்ய சொன்னது. அதன்படி 514 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமல் பெய்ரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இன்றைய 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து 3 ரன்னுக்குள் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 511 ரன்கள் தேவையிருப்பதால் நியூசிலாந்து தோல்வியை சந்திக்கிறது.