என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சயீம் அயூப் சதம்: தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
- மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
ஜோகனஸ்பெர்க்:
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என வென்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 101 ரன்னில் அவுட்டானார்.
பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அரை சதம் கடந்து அவுட்டாகினர். சல்மான் ஆகா 33 பந்தில் 48 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், யான்சென், போர்டுயின் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.