என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெ.ஆப்பிரிக்கா மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெ.ஆப்பிரிக்கா](https://media.maalaimalar.com/h-upload/2024/10/09/5221475-khjk.webp)
X
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெ.ஆப்பிரிக்கா
By
மாலை மலர்9 Oct 2024 5:31 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தென் ஆப்பிரிக்கா கேப்டன் லாரா அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவித்தார்.
- நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் இதுவாகும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். கேப்டன் லாரா 27 பந்தில் 40 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த அன்னேக் போஷ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னில் வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும்.
Next Story
×
X