search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விமர்சனங்களுக்கு பதிலடி: டெஸ்ட்டில் 4 ஆண்டுக்கு பிறகு சதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டன்
    X

    விமர்சனங்களுக்கு பதிலடி: டெஸ்ட்டில் 4 ஆண்டுக்கு பிறகு சதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டன்

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சதம் அடித்து அசத்தினார்.

    முல்தான்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் முல்தானில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக்- சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் ஷபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடக்கம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட்டில் 4 ஆண்டுக்கு பிறகு முதல் சதத்தை மசூத் பதிவு செய்துள்ளார். கேப்டனாக தனது முதல் சதத்தையும் அவர் அடித்துள்ளார். டெஸ்ட்டில் மொத்தமாக 5 சதங்களை மசூத் அடித்துள்ளார். இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான விமர்சனங்களுக்கு தனது சதத்தின் மூலம் மசூத் பதிலடி கொடுத்துள்ளார்.

    Next Story
    ×