என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்: 7வது இலங்கை பவுலரானார் தீக்ஷனா
- முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
- ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.
ஹேமில்டன்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.
மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.