search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிக்கெட்டில் நிறைவேறாத ஆசை- ஆச்சரியத்தை ஏற்படுத்திய அஸ்வினின் பதில்
    X

    கிரிக்கெட்டில் நிறைவேறாத ஆசை- ஆச்சரியத்தை ஏற்படுத்திய அஸ்வினின் பதில்

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 2011-ம் ஆண்டு அறிமுகமாகி உள்ளார்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இது விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் கிரிக்கெட்டில் நிறைவேறாத ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு அஸ்வின், பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை. அதுதான் கிரிக்கெட்டில் எனது நிறைவேறாத ஆசை என கூறியுள்ளார்.

    அவர் சொல்லுவது போல அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2011-ம் ஆண்டு தான் அறிமுகமாகி உள்ளார். ஆனால் இந்திய அணி 2008-க்குப்பின் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாது எனவும் இரு தரப்பு தொடரில் பங்கேற்பதில்லை எனவும் பிசிசிஐ முடிவெடுத்தது.

    இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினால் பங்கேற்கமுடியவில்லை. ஆனால் ஐசிசி தொடர்களில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்வின் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×