என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக்: சமாரி அத்தபத்து விலகல்- மாற்று வீராங்கனையை அறிவித்த யுபி வாரியர்ஸ்

- மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதுவரை இத்தொடரில் 11 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதனைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் ஆர்சிபி மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளன. இதனால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் யுபி வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை மகளிர் அணி கேப்டன் சமாரி அத்தபத்து எதிர்வரும் நியூசிலாந்து தொடரின் காரணமாக நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ஜார்ஜியோ வோல் யுபி வாரியர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜியா வோல் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இத்தொடரிலும் தனது ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.