search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சச்சின் சாதனை தகர்ப்பு: புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி
    X

    சச்சின் சாதனை தகர்ப்பு: புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி

    • வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் பும்ரா 4 விக்கெட், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    சென்னை:

    இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் குவித்தனர்.

    வங்கதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 32 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்னும், பண்ட் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

    2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

    முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    விராட் கோலி 243 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ், குமார் சங்ககரா 269 இன்னிங்ஸ், காலிஸ் 271 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸ்.

    Next Story
    ×