என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தோனியை விட ஒரு படி மேலே இருக்கிறார்- விராட் கோலியை புகழ்ந்த கபில் தேவ்

- விராட் கோலி, பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்.
- சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் அரையிறுதியில் மோதிய இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் சச்சின், தோனியை விட சேஸிங்கில் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறார் என இந்திய அணி முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். அதில்தான் அவருக்கு ஆற்றல் கிடைக்கிறது. அவர் அந்த அழுத்தத்தில் விளையாட விரும்புகிறார். அவரை போல சில கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த குணம் உள்ளது.
நாளின் இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதை செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதிரணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.
என்று கபில்தேவ் கூறினார்.