என் மலர்
கிரிக்கெட் (Cricket)

X
ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச்: அசாருதீன் சாதனையை சமன் செய்த விராட் கோலி
By
மாலை மலர்21 Feb 2025 1:01 AM IST

- முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த இந்திய வீரர்களில் அசாருதீன் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவரும் தலா 156 கேட்ச் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் சங்ககரா (448ல் 218), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (375ல் 160) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
Next Story
×
X