என் மலர்
கிரிக்கெட் (Cricket)
கழுத்து வலியால் அவதி: ரஞ்சி போட்டிகளில் கோலி விளையாடுவாரா? வெளியான தகவல்
- பிசிசிஐ-ன் விதிமுறையால் ம், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
- விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார்.
மும்பை:
இந்திய அணியின் மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இனி இந்திய அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. பிசிசிஐ-ன் விதிமுறையால், பண்ட், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரஞ்சியில் களமிறங்கவுள்ளனர்.
இந்த நிலையில் மூத்த வீரரான விராட் கோலி தேசிய அளவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி, கடைசியாக 2012-ம் ஆண்டில் தான் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி இருந்தார். அவர் அப்போது டெல்லி மாநில அணிக்காக விளையாடி இருந்தார். இப்போதும் அவரது பெயர் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் பரிசீலனையில் உள்ளது. அவரை ரஞ்சி டிராபி அணியில் சேர்ப்பதா? வேண்டாமா? என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
விராட் கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக அவர் ஊசி செலுத்தி கொண்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் தான் இந்த குழப்பத்துக்கு காரணம். இந்த நிலையில். டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலியின் பெயரை அணியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
விராட் கோலி விளையாட மறுத்ததால் கழுத்து வலி என்ற காரணம் சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி இருக்கிறதா? என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி எந்த வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையோ, அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் தொடரில் இருந்தும் நீக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும், ஐபிஎல் தொடரிலும் கூட அந்த வீரர் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.