search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரிஸ்வானின் டபுள் செஞ்சூரிக்கு முன் டிக்ளேர்: விமர்சிக்கும் நெட்டிசன்கள்

    • முதல் இன்னிங்சில் ஷகீல், ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்யும்போது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்திருந்தார்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதன் இன்னிங்சில் பாகிஸ்தான் 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் அப்போது 171 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 29 ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடித்திருப்பார். அதற்குள் கேப்டன் மசூத் டிக்ளேர் செய்து அவரது இரட்டை சதத்தை தடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    அதேவேளையில் 141 ரன்கள் விளாசிய பாகிஸ்டதான் அணியின் ஷகீல் கூறியதாகவது:-

    நாம் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடிக்கவில்லை என்று பார்க்கிறோம். முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கவில்லை.

    ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் டிக்ளேர் செய்ய இருக்கிறோம் என்பதை ரிஸ்வானிடம் தெளிவாக சொல்லப்பட்டது. அதனால் எப்போது அறிவிப்போம் என யோசனை அவருக்கு இருந்தது. நாம் குறைந்தபட்சம் 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இவ்வாறு ஷகீல் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பாகிஸ்தானின் டிக்ளேர் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. 500 ரன்களை தொட்டதும் டிக்ளேர் செய்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடித்திருப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×