என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கேரளாவுக்கு எதிரான போட்டி: ஹெல்மெட்டால் 3 ரன்னில் வெற்றியை இழந்த குஜராத்- வைரல் வீடியோ

- போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் எடுத்தார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
- குஜராத் அணி 455 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
இதில் குஜராத்- கேரளா அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்பாக சென்றது. முதலில் பேட்டிங் செய்த கேரளா அணி முதல் இன்னிங்சில் 457 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்க வீரர்களான பஞ்சால்- ஆர்யா தேசாய் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்தது.
ஆர்யா தேசாய் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சால் 148 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பரபரப்பான கட்டத்தில் 446 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்தது. இன்னும் 12 ரன்கள் எடுத்தால் முதல் இன்னிங்சில் கேரளா அணியை விட குஜராத் அணி முன்னிலை பெற்றுவிடும். அப்படி எடுத்து விட்டால் குஜராத் அணி வெற்றி பெற்று விடும். ரஞ்சி டிராபி போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் குவித்துள்ளார்களோ அந்த அணி வெற்றி பெறும்.
அந்த வகையில் கடைசி ஜோடி விளையாடியது. கடைசியாக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நாக்வஸ்வல்லா அதிரடியாக விளையாடுவார். அந்த பந்து சில்லி பாய்ண்டில் இருந்த கேரள வீரரின் ஹெல்மெட்டில் பட்டு சிலிப் திசையில் நின்று கொண்டிருந்த சச்சின் பேபி கையில் சிக்கியது.
The historic moment when the "one-run-victory" specialists, Kerala, assured their entry into the #RanjiTrophy final! pic.twitter.com/7uS5nWL1Or
— Shashi Tharoor (@ShashiTharoor) February 21, 2025
கேரள வீரர்கள் அவுட் என தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். ஆனால் பேட்டர்கள் இருவரும் அவுட்டா இல்லையா என்பது போல களத்தில் நின்றனர். நடுவர்கள் இருவரும் ஆலோசித்து அவுட் என தெரிவித்தனர்.
2 முன்னிலையை பெற்றதால் கேரள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது உறுதி ஆகிவிட்டது. இன்று கடைசி நாள் என்பது குஜராத் அணி 2-வது இன்னிங்சில் விளையாட வாய்ப்பு இல்லை. கேரளா அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கேரளா அணி ரஞ்சி டிராபி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.