என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஐபிஎல்-ல் அன்கேப்டு வீரராக எம்.எஸ்.டோனி விளையாடினால் அவரின் சம்பளம் குறையுமா?
- ஐபிஎல் 2025 சீசனில் வீரர்களை தக்க வைப்பதற்கான விதிகளை வெளியிட்டது பிசிசிஐ
- uncapped வீரராக எம்.எஸ்.டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.
வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார்.
வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அணியில் தக்க வைக்கப்படும் முதல் 3 வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடிசம்பளமாக வழங்கப்படும்.
அணியில் தக்கவைக்கப்படும் அடுத்த 2 வீரர்களுக்கு முறையே ரூ.18 கோடி, ரூ.14 கோடி சம்பளமாக வழங்கப்படும். அணியில் தக்கவைக்கப்படும் uncapped வீரருக்கு 4 கோடி சம்பளமாக வழங்கப்படும்.
ஒரு அணி 5 சர்வதேச வீரர்கள் மற்றும் 1 uncapped வீரரை தக்க வைக்கிறது எனில் இதற்கே 79 கோடியை செலவு செய்யவேண்டும். அதன்படி 120 கோடியில் 79 கோடி போக மீதமுள்ள 41 கோடியை தான் ஏலத்தில் அந்த அணியால் செலவு செய்யமுடியும்.
வரும் ஐபிஎல் தொடரில் uncapped வீரராக எம்.எஸ்.டோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு தக்கவைக்கப்பட்டால் டோனிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். தற்போது 12 கோடி ரூபாய் சம்பளம் பெறும் டோனி இதனால் தனது சம்பளத்தில் 8 கோடியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்