search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? புது அப்டேட்
    X

    சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? புது அப்டேட்

    • இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
    • இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

    ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி துவங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

    இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

    "இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சர்வதேச சுற்றுப் பயணங்களின் போது நாங்கள் எப்போதும் அரசிடம் அனுமதி கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்."

    "அந்த வகையில், அணி குறிப்பிட்ட வெளிநாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாட வேண்டுமா, விளையாட கூடாதா என்ற முடிவை அரசு தான் எடுக்கும். இந்த விஷயத்திலும் அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்," என்று பதில் அளித்தார்.

    2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி. தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் சென்று விளையாடியதே இல்லை.

    Next Story
    ×