search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: வில்லியம்சன், கான்வே அவுட்.. அறிமுக வீரருடன் நியூசிலாந்து அணி அறிவிப்பு
    X

    இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: வில்லியம்சன், கான்வே அவுட்.. அறிமுக வீரருடன் நியூசிலாந்து அணி அறிவிப்பு

    • இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.
    • இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார்.

    இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடர்களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதன்பிறகு ஒருநாள் தொடரும் நடக்கவுள்ளது.

    டி20 தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 2-ந் தேதி முடிகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 5-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி முடிவடைகிறது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக மிட்செல் சாட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த 2 தொடர்களில் இருந்தும் வில்லியம்சன் மற்றும் கான்வே விலகியுள்ளனர்.

    இந்த தொடரில் அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் அறிமுகமாகி உள்ளார். இவர் இரு தொடர்களிலும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து டி20 அணி விவரம்:-

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபௌல்க்ஸ், மிட்ச் ஹே, மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், நாதன் ஸ்மித்

    நியூசிலாந்து ஒருநாள் அணி விவரம்:-

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, மிட்ச் ஹே, மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, வில் யங், நாதன் ஸ்மித்.

    Next Story
    ×