என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கீசி கார்டி, கிங் அதிரடி சதம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
- கீசி கார்டி, கிங் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
- கீசி கார்டி 128 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பார்படாஸ்:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட்ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளின் முடிவில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாசில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து 24 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். கடைசி கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 38 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மேத்யூ போடு 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப், ரூதர்போர்ட்தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங், எவின் லூயிஸ் களமிறங்கினர். லீவிஸ் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கீசி கார்டி, கிங்குடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 18 ரன்கள் இருந்த போது கிங் அவுட் ஆனார். 102 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 267 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.