என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
89 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்: முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு இலங்கை பதிலடி
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரோவ்மன் பவல் 20 ரன்கள் எடுத்தார்.
- இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிசங்கா 49 பந்தில் 54 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் 89 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 3 விக்கெட்டும், தீக்ஷனா, அசலங்கா, ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.