என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்? இன்று மோதல்
- பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
- அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.
துபாய்:
9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது. அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதியை உறுதி செய்யும் வேட்கையுடன் தயாராகிறது.
பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. திடீர் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவர் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பாத்திமாவுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் முனீபா அலி அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை ஒரு போதும் வென்றதில்லை. இதுவரை அந்த அணிக்கு எதிராக மோதியுள்ள 15 ஆட்டங்களில் 13-ல் தோற்றுள்ளது. 2 ஆட்டத்தில் முடிவில்லை. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதற்கிடையே சார்ஜாவில் நேற்றிரவு நடந்த பி பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 104 ரன் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்