என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்த பெங்களூரு

- டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
- பெங்களூரு தரப்பில் எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார்.
3-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் பெங்களூருவில் இன்று தொடங்கியது.
இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூருவின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனி வயட் ஹாட்ஜ் களமிறங்கினர். இதில் டேனி வயட் ஹாட்ஜ் 9 ரன்னிலும், மந்தனா 26 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து எலிஸ் பெர்ரி ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தது.
இதில் ராக்வி பிஸ்ட் (1), கனிகா அகுஜா (3), ரிச்சா கோஷ் (28), ஜார்ஜியா வரேஹம் (6) ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதிரடியாக ஆடிய எலிஸ் பெர்ரிஅரைசதம் அடித்து அசத்தினார். இவர் 81 ரன்களில் அவுட் ஆனார்.
இன்னிங்ஸ் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆட உள்ளது.