search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - சாத்தியக்கூறுகள் சொல்வது என்ன?
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - சாத்தியக்கூறுகள் சொல்வது என்ன?

    • ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
    • ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட கேள்விக்குறியாகிவிட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 52.78 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 61.46 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

    இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முன்னேறும் வாய்ப்புகள் எப்படி இருக்கிறது?

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்திய அணிக்கு இன்னும் ஒரே போட்டி தான் மீதம் உள்ளது. இந்தப் போட்டி சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இதேபோல் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

    அந்த வகையில், கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணியின் புள்ளிகள் 57.02 ஆக மாறும். இந்த புள்ளிகளை வைத்தே ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட முடியும். இப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணியின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவும் பட்சத்தில் அந்த அணி இலங்கையை ஒரு போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும்.

    இந்திய அணி தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்ற வேண்டும். இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். அல்லது ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டு போட்டிகளும் டிரா ஆகும் போது ஆஸ்திரேலியாவின் புள்ளிகள் 55.26 ஆக மாறும். இதைவிட நிலைமை மோசமானால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

    ஒருவேளை இரு அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் சமமாக இருந்தால், சீரிஸ் வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி தேர்வு செய்யப்படும். எதுவாயினும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற தவறும் பட்சத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.

    Next Story
    ×