என் மலர்
கிரிக்கெட் (Cricket)
புலவாயோ டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் 95/2
- முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவித்தது.
- சீன் வில்லியம்ஸ், எர்வின், பென்னெட் ஆகியோர் சதமடித்தனர்.
புலவாயோ:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் கர்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கைடனோ 46 ரன்னில் அவுட்டானார்.
சீன் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சதமடித்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் மற்றும் பென்னெட் ஆகியோரும் சதம் கடந்து அசத்தினர்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. பென்னெட் 110 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.